×

நெருக்கும் பாஜக... கூட்டணிக்கு செல்லலாமா? என தவெக மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக் கேட்பு

 

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கருத்து கேட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் இன்று மதியம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் Zoom meeting ல் நடைபெற்றது. 
சமீபத்தில் 60 வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்ததாக கூறப்படும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக கருத்துக்கள் மாவட்ட செயலாளரிடம் கேட்கப்பட்டது அதில் தலைமை எது சொன்னாலும் அதற்கு கட்டுப்படுகிறோம் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று எவரையும் நம்பி நாம் கட்சி தொடங்கவில்லை. தனியாக நின்றாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை தவிர மாவட்ட செயலாளர்கள் மற்ற தொகுதிகளுக்கு இறுதி வேட்பாளர்களை விரைவில் தேர்வு செய்து தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும், ஏற்கனவே தொகுதிக்கு 2 முதல் 3 வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்பிய நிலையில் இறுதி வேட்பாளர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதில் தலைமை கூறும் வேட்பாளர்களை மட்டும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.