"18 வயது குழந்தை, தனது 1 வயது குழந்தையுடன் விளையாடுவது அவல நிலை" - தவெக எம்.எல்.ஏ
பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏ சத்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது பரவலாக இளம் வயது திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இளம் வயது திருமணங்களால் பெண்கள் மிகவும் பாதித்து வருகின்றனர். உடலாலும், மனதாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குழந்தை திருமனங்களும் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன. 18 வயது குழந்தை, தனது 1 வயது குழந்தையுடன் விளையாடுவது அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று பிரிந்துவிடுகின்றனர். எனவே பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். குடும்ப வறுமை, சொந்தம் விட்டுப்போக கூடாது என்பதற்காக இளமை திருமணம் அதிகரிக்கிறது. 16 வயதில் திருமணமாகி 18 வயதில் குழந்தைக்கு தாயாகும் நிலைக்கு இளம்பெண்கள் தள்ளப்படுகின்றனர். ஆகவே பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 20 அல்லது 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்” என்றார்.