“அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து 'மீட்டிங்' நடத்தினேனா? தளபதியோட பேர கெடுக்குறேனு வேற சொல்றாங்க”- கனிமொழி எம்எல்ஏ விளக்கம்
அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து 'மீட்டிங்' நடத்தியதாக கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் மீது விமர்சனம் எழுந்த நிலையில், விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் தளத்தில், “எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்… பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம். தற்போது, எனது புதிய MLA அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் painting மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.