தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் பறக்கவிட்டு வீடியோ- சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பக வனப்பகுதியில் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டபெரியகுளம் தவெக எம்.எல்.ஏ. சபரி ஐயங்கரனின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8-ஆம் தேதி முல்லை பெரியாறில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும் நிகழ்வில் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் பங்கேற்றனர். முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறக்கும் நிகழ்ச்சியில் தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்டு ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் கேரள வனத்துறை மற்றும் காவல்துறையினர் பெரியகுளம் எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் ட்ரோன் பறக்கவிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.