☰
×

"நான் ஆபாச மெசேஜ் அனுப்பவே இல்ல"- தவெக எம். எல். ஏ. பேட்டி 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்த நிலையில், அதற்கு சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏ மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ அருள் விக்னேஷ், "அதிகாரிகள் மீது பெரிய மரியாதையும், மதிப்பும் எனக்கு இருக்கிறது. அதுமாதிரியான செயல் எதுவும் நான் செய்யவில்லை. ஏன் இப்படி தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை. என் மீதும் எங்கள் கட்சி மீதும் வன்மம் அதிகம் இருக்கிறது. இதனால் அவதூறு நோக்கில் தவறான செய்தி பரப்புகின்றனர். ஆனால் மக்கள் இப்போதும் எங்கள்கூடத்தான் இருக்கின்றனர். இது தவெகவின் ஆட்சி. கண்டிப்பாக ஒருபோதும் நாங்கள் அதுமாதிரி தவறு செய்யமாட்டோம். புதிய பேருந்து நிலையம் கட்டியதில் ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். அதனால் என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சி நபர்கள் சமூக வலைதளத்தில் ஆட்சியையும், என்னையும் குறை கூறும் நோக்கில் அவதூறு பரப்பி வருகிறார்கள்.  இதுபோன்று என் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.