☰
×

மழைநீர் வடிகால் பணிகளை 4 மாதங்களில் முடித்தோம்- செங்கோட்டையன் 

 

நவ 15-க்குள் அதிகப்படியான பட்டாக்கள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "சென்னையில் கடந்த திமுக ஆட்சியில் 40% மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 4 மாதங்களில் அப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயபாஸ்கருக்கு பல வித்தைகள் தெரியும். எங்களை எல்லாம் அழைத்து வந்து களம் காண போகிறார்..களத்தில் நிற்பது மட்டும் அல்ல வெற்றியும் பெறுவார்.. அதுமட்டுமல்ல முதல்வர் விஜய்க்கு பின்னால் நின்று பணியாற்ற போகிறார்.

பொதுவாக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று, வார்டு மறுவரையறை, மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணிகளை முடிப்பதற்காகத்தான் தற்போது தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். நவ 15-க்குள் அதிகப்படியான பட்டாக்கள் வழங்கப்படும். 20 லட்சம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.