×

குதிரை பேரத்தைவிட... அதிமுக- திமுக இணைந்து ஆட்சி அமைக்க நினைத்தது தவறு: செங்கோட்டையன்

 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக காலம் பதில் சொல்லும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இந்தியாவின் வரலாற்றில் தமிழகத்தின் வரலாற்றில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை காக்கின்ற ஒரு தலைவர் முதலமைச்சர் விஜய். தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய், நாளை தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சர் அவருடைய செயல்பாடுகளை தெரிந்ததற்கு பிறகு எல்லோரும் இன்று இணைந்து இருக்கிறார்கள். இது மகிழ்ச்சியான ஒன்று. தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரைக்கும் குதிரை பேரம் எங்கும் நடைபெறவில்லை. குதிரை பேரம் நடத்தியது யாரென்று நாடு தெரிந்திருக்கிறது. திமுக ஆதரவோடு நான் முதலமைச்சர் ஆவேன் என்று தெரிவித்தது யார்?. அவரிடத்தில் பதில் கேட்டால் அது சரியாக இருக்கும். நானே ராஜினாமா செய்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தது அவரவரின் விருப்பம்.

புதிய ஆட்சி வந்திருக்கிறது.6 மாதங்களுக்கு நாங்கள் எந்த கருத்தும் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சி தெரிவித்தனர். நாங்களும் பொறுத்திருந்து தான் ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் அவகாசம் தர வேண்டும். குற்றங்கள் நடைபெறுகின்ற போது உடனுக்குடன் அதிரடியான நடவடிக்கைகளும் முதலமைச்சராக எடுத்திருக்கிறார். குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார் அதற்கான நடவடிக்கை உரிய முறையில் எடுக்கப்படுகிறது. வயித்து வலிக்காரருக்கு கட்டிலை திருப்பி போட்டு படுத்தால் வயிற்று வலி சரியாகாது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இபிஎஸ் வயிற்று வலிக்காரராக உள்ளார். கட்சியில் சேர்ந்து இருப்பவர்கள் என்னை சந்தித்தார்கள். நான் அவர்களை சந்தித்தேன், நான் யாரையாவது சேர்த்து இருக்கிறேனா? எடப்பாடி பழனிச்சாமி என் மீது வேகத்தில் இருக்கிறார்.நான் வெளியில் வந்த பிறகு அவர் சரிந்திருக்கிறார். அதுதான் அவருக்கு வேதனை. அதிமுகவில் ஜனநாயகம் இல்லை, எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை பெரிதாக வைத்தால் தான் சிரிக்கிறார். அம்மாவும் ,தலைவர் படமும் இல்லாமல் அவருக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பாராட்டு விழா நடத்தும் போது அம்மாவின் புகைப்படமும் எம்ஜிஆரின் படமும் இல்லாமல் என்னை பாராட்டினால் போதும் என நினைத்தார். கொள்கை ரீதியாகவும் லட்சிய ரீதியாகவும் இயக்கத்தை காக்கும் நபர் என்பது மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.