"கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழியில் தரிசனம்"- அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு
கோவிலில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக நபர் ஒருவர் எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்ட நிலையில், அதற்கு செவி சாய்க்கும் விதமாக அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அன்புடன் வணக்கம்,
— TVK Ramesh (@RameshOffcl) June 16, 2026
இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் அனைத்திலும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை வரிசையில் நிற்க விடாமல், சிறப்பு வழியில் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அனைத்து திருக்கோயில் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.
சம்பந்தப்பட்டவர்கள்… https://t.co/5gKteO4Dog
அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் ரமேஷ், “அன்புடன் வணக்கம், இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் அனைத்திலும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை வரிசையில் நிற்க விடாமல், சிறப்பு வழியில் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அனைத்து திருக்கோயில் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.