தவெகவுக்கு எதிராக வன்முறை- அதிமுக நிர்வாகிகளை திமுகவினர் ஏவி விடுவதாக அருண்ராஜ் குற்றச்சாட்டு
"திமுக-அதிமுகவின் கள்ளக் கூட்டணி" தற்பொழுது ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வெளிவந்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
திமுகவின் பணத்தை வைத்து தவெகவுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அதிமுக நிர்வாகிகள்!
— Arunraaj TVK (@arunraajkg) September 27, 2026
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரையை தடுக்க முயன்ற "அதிமுக-திமுக" கூட்டு சதிக்கு கடும் கண்டனங்கள்.
நேற்றைய தினம் (செப்டம்பர் 26) மாலை தாராபுரம் ஒன்றியம் பொட்டிக்காம்பாளையம்,… pic.twitter.com/jyDBk9lQZU
இதுதொடர்பாக அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில், “திமுகவின் பணத்தை வைத்து தவெகவுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அதிமுக நிர்வாகிகள்! தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரையை தடுக்க முயன்ற "அதிமுக-திமுக" கூட்டு சதிக்கு கடும் கண்டனங்கள்.
நேற்றைய தினம் (செப்டம்பர் 26) மாலை தாராபுரம் ஒன்றியம் பொட்டிக்காம்பாளையம், பொட்டிநாயக்கனூர் பகுதியில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரி திருமதி சத்தியபாமா பொன்னுசாமி அவர்களுடன், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சரும் கழகப் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு N. ஆனந்த் அவர்களின் தலைமையில், மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் அண்ணன் திரு செங்கோட்டையன் அவர்கள் முன்னிலையில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றிருந்தோம். அப்பகுதி மக்களும் கையில் ஆரத்தி தட்டு மற்றும் பூமாலைகளுடன் எங்களை வரவேற்க தயாராக இருந்தனர். அப்பொழுது அதிமுக கட்சி துண்டுடன் சுமார் பத்து நபர்கள் இடையிட்டு, அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க கூடாது என்று கோஷமிட்டதுடன், எங்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், கழக நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்று ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தினர். பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த பிரச்சனையில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது... போலீஸ் விசாரணையில் இதற்கு பின்னால், திமுகவின் சில பக்கத்து மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. "திமுக-அதிமுகவின் கள்ளக் கூட்டணி" தற்பொழுது ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வெளிவந்துள்ளது. மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கக்கூடிய ஜனநாயக உரிமை.
தேர்தல் களத்தில் கருத்துகளால் மோதாமல், தோல்வி பயத்தால் தங்களது குண்டர் படையை களம் இறக்கி மக்களை அச்சுறுத்த முயல்கிறார்கள். இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கெல்லாம் எங்கள் கழகத் தலைவரும் சரி, கழகத் தொண்டர்களும் சரி, தமிழக மக்களும் சரி ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள். வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது. அச்சுறுத்தலால் ஜனநாயகக் குரலை ஒடுக்க முடியாது. இந்த ஜனநாயக விரோத-வன்முறை "அதிமுக-திமுக" கும்பலுக்கு தாராபுரம் மக்கள், தங்கள் வாக்கின் மூலம் உரிய பதிலை வழங்குவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.