சத்தியபாமா பேசியதாக பரவும் வீடியோ AI- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
சத்தியபாமா பேசியதாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட AI வீடியோ என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “AI வீடியோ நானும் விடுவேன் பாக்குறீங்களா... சத்யபாமாவின் வீடியோ AI உதவியுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்னர் குழப்பத்தை உண்டாக்க திமுக சதி வேலை செய்தது. எங்களாலும் இதேபோல் ஏஐ வீடியோக்களை உருவாக்க முடியும். நானும் நாளை ஸ்டாலின் Sir 1000 கோடி செலவு பண்ணாருனு AI வீடியோ போடுவேன்” என்றார்.
தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா பேசியதாக வீடியோ பரவுகிறது. அதில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கும், ரூம் புக் செய்யவும் பல லட்சம் செலவு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கடந்த தேர்தலில் ₹31 கோடி செலவு செய்ததாக சத்தியபாமாவின் வீடியோ வைரலாகும் நிலையில், அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என ECI-ல் திமுக MLA ஆஸ்டின் புகாரளித்துள்ளார். வீடியோவில் இருப்பது அவர்தான் என்பது உறுதியானால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதோடு, 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை, 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடதக்கது.