×

ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெகவினர்

 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் தமிழக வெற்றிக் கழகத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஆர்வமுடன் வாக்கு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு மைய அறைக்குள் வாக்கு செலுத்தும் நபர் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் சட்டமன்றம் (தனி) தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் வாக்களித்தேன் என்பதை வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு அறைக்குள் வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதித்து செல்போனை வாக்கு செலுத்தும் அறைக்கு வெளியிலேயே வைத்து செல்வதற்கும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தான் TVK விற்கு வாக்களித்ததை உறுதி செய்து செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். வாக்குப்பதிவு அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதித்தும் தமிழக வெற்றிக்கழகத்தினர் செல்போன் எடுத்துச் சென்று வீடியோ படம் பிடித்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சர்ச்சையாகி உள்ளது.