தென்காசி அரசு மருத்துவமனையில் புகுந்து மருத்துவர்களிடம் விசாரணை நடத்திய தவெகவினர்!
தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மருத்துவ அணி நிர்வாகி எனக் கூறிக்கொண்டு வாசுதேவி என்பவர் திடீர் ஆய்வில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் விளக்கம் அளித்துள்ள வாசுதேவி, தான் நர்சிங் படித்துள்ளதாகவும், அதனால் வெள்ளை கோட் அணிந்து கொள்ள உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுடன் கலந்துரையாடவே சென்றிருந்தேன்