×

“நீதி வேண்டும்”- கையில் தாலியுடன் தவெக பொதுக்கூட்டத்தில் தகராறு செய்த பெண்

 

ஆவடி அருகே நடைபெற்றc தவெக பொதுக்கூட்டத்தில் தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேசிக் கொண்டிருந்த போது மைக்கை பிடுங்கி எனக்கு நீதி வேண்டும் என்று ஆங்கிலத்தில் பேசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி பொதுக்கூட்டம் ஆவடி அருகே திருநின்றவூரில் நடைபெற்றது திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் நுழைந்த பெண், மேடையில் ஏறி மைக்கில் தான் ஐடி ஊழியர் கோல்ட் மெடல் எனவும்  நீதி வேண்டும் எனவும் கூறி கையில் தாலியுடன் பேசினார். இதனால் குழப்பமடைந்த தவெகவினர் நைசாக மைக் கனக்‌ஷனை ஆப் செய்தனர். சிறிது நேரதில் அங்கிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏற்றினர். அப்போது அவரது உறவினர்கள் பெண்ணுக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த தவெகவினர் கூட்டம் நடத்தினால் போதும் என அவசர அவசரமாக நல திட்ட உதவிகளை கொடுத்து கூட்டத்தை முடித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ் மோகன், “தலைவர் விஜய் குறித்து நயினார் நகேந்திரன் பேசியிருப்பது அரசியலில்  மோசமான உதாரணமாக ஆகிவிடும். சமநிலை மறந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் வளர்ச்சியை பார்த்து நிலை தடுமாறி இப்படி உளறி இருக்கிறார், இதற்கு எனது கண்டனம். தவெக கொள்கை இல்லாத கூட்டம் என உதயநிதி கூறி இருப்பது நகைச்சுவையாக உள்ளது. அதிகார பகிர்வு என்பது தவெக  துவக்கத்தில் இருந்து கூறி வருகிறோம். அதிகாரம் உள்ள கட்சிகளிடம்  நாம் கேட்க வேண்டியது அதிகாரம். திரும்பத் திரும்ப ஐந்து சீட் 10 சீட்டு என கேட்கக் கூடாது. தேமுதிக தவெகாவுடன் கூட்டணி வைப்பது குறித்து அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும் எங்களது கட்சியில் பொதுக்குழு போட்டி கூட்டணி குறித்து முடிவுகளை தலைவர் தான் எடுப்பார்” என்றார்.