புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் நடந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
Oct 1, 2025, 17:08 IST
தமிழக வெற்றிக் கழகம் சென்னை மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடிவருகின்றனர். புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் தமிழக வெற்றிக்கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில்தான் நடைபெறுவது வழக்கம். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு போலீஸ் தேடிவருகின்றனர்.