சில மணிநேரத்தில் மாறிய கருத்துக்கணிப்பு! தவெக 98- 120 இடங்கள் வரை முன்னிலை
தமிழ்நாட்டில் தவெக 98 முதல் 120 இடங்கள் வரையில் முன்னிலை பெறக்கூடும், மேலும் தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் 35 சதவீத வாக்குகளை பெரும் என்று இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
AxisMyIndia (India Today) நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் தவெக 98 முதல் 120 இடங்கள் வரையில் முன்னிலை பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரையில் முன்னிலை பெறும். அதிமுக 22 முதல் 32 இடங்களை பெறும் என்றும் கணித்துள்ளது. வாக்குசதவீதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அடுத்த முதலமைச்சராக யாரை விரும்புகிறார்கள்? என்ற தகவலின்படி, மு.க. ஸ்டாலின்: 35% எடப்பாடி பழனிசாமி: 22% விஜய்: 37% என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.