தவெக தலைவர் விஜய் ஷாக்..! தவெக வேட்பாளர் அதிமுகவில் ஐக்கியம்!
2026ம் ஆண்டு சட்டசபை தொகுதியில் சேலம் மாவட்டம எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவர் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டார். அவரின் மனைவி மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யவில்லை என்று கூறி இருவரின் வேட்பு மனுக்களையும் தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்தது.
இதனால் எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடுவதில் சிக்கல் எழுந்தது.அப்போது, அதே தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரை ஆதரிப்பதாக தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேர்தல் முடிவுகளின் போது தவெக ஆதரவு வேட்பாளர் கணிசமாக ஓட்டுகளை பெற்றார். அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான இபிஎஸ் பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவே, வேண்டும் என்றே வேட்புமனுவை அருண்குமார் முறையாக தாக்கல் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. தவெகவில் சேரும் முன்பு அவர் அதிமுகவில் இருந்ததால் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் விமர்சனங்களாகவும் மாறின.
இந்நிலையில், தாய் கழகமான அதிமுகவில் இபிஎஸ் முன்னிலையில் அருண்குமார் இன்று இணைந்தார்.