×

த.வெ.க. தலைவர் விஜய் ரமலான் வாழ்த்து..!

 

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரமலான் என்பது ஒரு மத பண்டிகை மட்டுமல்லாது, மனிதர்களை ஒன்றிணைக்கும் பெரும் வாய்ப்பாகும் என்று குறிப்பிட்டார். நோன்பு வழியாக பொறுமை, ஒழுக்கம், கருணை போன்ற பண்புகள் வளர்க்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

இந்த புனித காலத்தில், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவி செய்வது சமூகத்தின் முக்கிய கடமையாகும் என்றும் விஜய் வலியுறுத்தினார். “அன்பைப் பகிர்வோம்” என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதரிடமும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அன்பைப் பகிர்வோம்!

சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போற்றும் நன்னாளாம் இந்த ஈகைப் பெருநாள் புனித ரமலான் திருநாள்.


அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியையும், அமைதியையும் வளத்தையும் கொண்டு வரட்டும்!

என் அன்பு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.