சிக்கலில் தவெக தலைவர் விஜய் : தேர்தல் பரப்புரைகளில் தொடரும் அசம்பாவிதங்கள்..!!
விஜய்க்கு தமிழக மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ரசிகர்கள் அவரைப் பார்த்தாலே போதும் என்ற மனநிலையிலேயே அவர் வரும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்கின்றனர். பல சமயங்களில் இது மிகவும் ஆபத்தான சம்பவமாக மாறுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் விஜய் தனது மக்கள் பரப்புரையை தொடங்கினார். திருச்சியில் முதன் முதலில் பரப்புரையை தொடங்கிய விஜய்யை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27 -ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் பரப்புரையில் விஜயை பார்க்க சென்ற இளைஞர் அடிபட்டு உயிரிழந்த சம்பவம், சேலத்திலும் விஜய் பரப்பரைக்கு சென்று இளைஞர் வெயிலில் சிக்கி மயங்கி உயிரிழந்த சம்பவம் என விஜய் பரப்புரையும் விபத்தும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இன்றைய தினம் கூட விஜய் பார்ப்பதற்காக அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது விபத்து ஏற்பட்டிருக்கிறது.புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் விஜய்யை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் பாதுகாப்பு வாகனத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயமடைந்த 2 இளைஞர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.