×

“உயிரிழந்த 39 பேரில் இன்னும் ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை”

 

தமிழக வெற்றி கழக தலைவர் திரு.விஜய் அவர்கள் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கரூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. 14 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன ஒரு பெண்மணி அடையாளம் காணப்படவில்லை. அவரை அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது.

தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.