ஜெயலலிதாவை ஆபாசமாக பேசிய மு.க.ஸ்டாலின் - வீடியோ வெளியிட்ட தவெக
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் ஆபாசமாக பேசும் வீடியோவை தவெக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாகத் தொட்டுத் தொடரும் திமுகவின் ஆபாச பாரம்பரியம்!
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 10, 2026
பெண்ணியம் என்பார்! பெண் விடுதலை என்பார்! ஆனால் கட்சி மேடை, கல்யாண மேடை, பொது மேடை எதுவாயினும் ஆபாசத்தை மட்டுமே கொள்கையாகக் கொள்வார்.
குடும்ப வாரிசு + ஆபாச பேச்சு + வன்மம் +அவதூறு = திமுகவின் தலைமை தகுதி… pic.twitter.com/VXuY6XyO1q
அதில், “தலைமுறை தலைமுறையாகத் தொட்டுத் தொடரும் திமுகவின் ஆபாச பாரம்பரியம்! பெண்ணியம் என்பார்! பெண் விடுதலை என்பார்! ஆனால் கட்சி மேடை, கல்யாண மேடை, பொது மேடை எதுவாயினும் ஆபாசத்தை மட்டுமே கொள்கையாகக் கொள்வார். குடும்ப வாரிசு + ஆபாச பேச்சு + வன்மம் +அவதூறு = திமுகவின் தலைமை தகுதி சான்றிதழ்! பேச்சில் இத்துணை ஆபாசம் பாய்ந்து இருந்தால், இவர்களின் ஆட்சியில் மட்டும் எத்துணை கண்ணியம் இருந்திருக்கும்? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று ஊருக்கு உபதேசித்துவிட்டு இவர்கள் பேசுவது ஆபாசமும் அசிங்கமும் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.