☰
×

துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கிறது தவெக!

 

துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான குற்றச்சாட்டு குறித்து, தவெக தலைமை ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது. 

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாகவும்,  துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் நேற்றிரவு  சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, காலையில் ரவிசங்கர் அருகிலேயே அமர்ந்துகொண்டு, கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை வைத்துத் தவறாகப் பரப்புவதாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான  குற்றச்சாட்டு குறித்து, தவெக தலைமை ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது. துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான குற்றச்சாட்டு குறித்து தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொள்ளும் என தவெக விளக்கம் அளித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழுவில் CM விஜய், அமைச்சர் ஆனந்த் உள்ளனர்.