“பாரதிதாசனுக்கு இதுவரை ரூ.48 லட்சம் கொடுத்தாச்சு”- தவெக அரசு விளக்கம்
சமூக நலத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தின் அட்டவணைப்படி, பாரதிதாசனின் அயல்நாட்டு Ph.D. கல்விக்காக இதுவரை ₹48,22,097 Sanctioned / Paid செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D.,) மேற்கொண்டு வரும் திரு.பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான மறுப்பறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர் மலேசிய நாட்டில் உள்ள National University of Malasiya- Ph.D., (Tissue Engineering and Regenerative Medicine) படிப்பில் உயர்கல்வி பயில மேற்படி மாணவர் திரு.பாரதிதாசன் என்பவருக்கு மூன்றாண்டுகளுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கிட ஒப்புதல் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரால் 09.01.2025 அன்று பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், ஒரு மாணவருக்கு கல்வி நிறுவனத்திற்கு செலுத்தும் கட்டணம் மற்றும் அவர் வெளிநாட்டில் வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவினங்கள் (Living & other Expenses) சேர்த்து அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வழங்கப்படுகிறது.
National University of Malasiya-வில் மாணவர் திரு.பாரதிதாசன் பயிலும், Ph.D., படிப்புக்கு ஆண்டொன்றுக்கு கல்விக் கட்டணமாக ரூ.5.00 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர் 2025-2026-ஆம் ஆண்டு தனது முதலாமாண்டு Ph.D., படிப்புக்கு கல்விக்கட்டணம் போக மீதமுள்ள ரூ.31.00 இலட்சத்தையும் வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாக (Living & other Expenses) கோரியிருந்த நிலையில், அரசால் மீதமுள்ள ரூ.31.00 இலட்சத்தை வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாக வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை பெற்றப்பின் உரிய செலவினங்களுக்கான ஆவணங்களை உடன் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது, ஆனால், மாணவரால் 10 மாதங்கள் கடந்த பின்னரும், அதற்கான ஆவணங்களை சரிவர சமர்ப்பிக்காமலும், 2-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை ரூ.36.00 இலட்சத்தை கோரிவருகிறார். இருந்த போதிலும், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மாணவரின் 2-ஆம் ஆண்டு Ph.D., கல்விக்கு அவர் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய முழு கல்விக் கட்டணம் ரூ.5.57 இலட்சம் மற்றும் மாணவருக்கு வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 இலட்சம், ஆகமொத்தம் ரூ.12.00 இலட்சம் (RM 23460 + RM 27600 = RM 51060) அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாணவருக்கு வழங்கப்படட தொகை விவரம் பின்வருமாறு
இதுவரை ரூ.48,22,097/-ஐ மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, மாணவருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்குறிய சரியான பயனீட்டு விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் உள்ளார். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலேயே கூடுதல் தொகை பெற சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மாணவர் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்.அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் எந்த விதமான தாமதமோ, தடங்கலோ இல்லை.மாணவரின் தவறான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு (2026-2027) 362 மாணாக்கர்களுக்கு வழங்கி இருப்பது பெரும் சாதனையாகும்” என விளக்கம் அளித்துள்ளது.