☰
×

தவெக அரசின் 6 மாதத்தில் 2,993 டெண்டர்கள் அதிரடி ரத்து

 

ரூ.5,000 கோடி மின்வாரியம், ரூ.700 கோடி சென்னை மாநகராட்சி, ரூ.400 கோடி  என தவெக அரசின் 6 மாதத்தில் 2,993 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அ) நெடுஞ்சாலைத்துறை (Highways)

- ஓரகடம் - செய்யூர் 4 வழிச்சாலை, அண்ணா சாலை மேம்பாலம், போர்ட் - மதுரவாயல் பறக்கும் சாலை, ஹரூர், செஞ்சி, ஓசூர், சேலம் ரிங் ரோடு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 21 நெடுஞ்சாலைத் துறை லிமிடெட் டெண்டர்கள் (தலா ரூ.10 லட்சம்) ரத்து. செய்யப்பட்டுள்ளது. 

ஆ) பொதுப்பணித்துறை (PWD), நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, குடிநீர் வழங்கல் துறை:

- தமிழக அரசு 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை (Short-term Tenders) ரத்து செய்துள்ளது. இவை மே 13 முதல் மே 22 வரை விடப்பட்டவை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.16.83 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் டெண்டருக்கு 6 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இ) மின்வாரியம் (TANGEDCO / மின்சாரத்துறை):

- மின்சாரத்துறை அமைச்சர் Nirmal Kumar, ரூ.5,000 கோடி மதிப்பிலான மின்வாரிய டெண்டர்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். ஸ்மார்ட் மீட்டர், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் தொடர்பாக ஒரு மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஈ) தொழில்துறை, போக்குவரத்து:

- சென்னை, கோவை, மதுரைக்கு 500 மின்சார பஸ் வாங்கும் டெண்டர் மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
- சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை திட்டம் மற்றும் 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை தனியார் மய டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

உ) நகராட்சி நிர்வாகம் - சென்னை மாநகராட்சி:

- சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து.இதில் ரூ.310 கோடி வேளச்சேரி மேம்பாலம், ரூ.7 கோடி கொடுங்கையூர் மேம்பாலம் அடங்கும். 

தவெக அரசு தரப்பில் ரூ.400 கோடிக்கு மேல் மதிப்புள்ள சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை, மின்சாரத் துறை டெண்டர்கள் ஊழல் குற்றச்சாட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக 100 நாள் சாதனை விளக்கத்தில் கூறியுள்ளது.  ஆனால் எதிர்க்கட்சிகள் சொல்வது: ரூ.பல்லாயிரம் கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு கடன் வாங்குவது முதல் 6 மாதத்தில் 21% குறைந்ததாக காட்டுகிறது.