×

மூதாட்டியின் நகையை பறிக்க முயன்ற தவெக நிர்வாகி!

 

நாகையில் மூதாட்டியின் நகையை பறித்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் அருகே இருக்கை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி (65) என்ற மூதாட்டி, வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்றார். மூதாட்டி மற்றும் அவரது மருமகளின் சத்தத்தைக் கேட்டு அந்த நபர் தப்பியோட முயன்ற போது, அப்பகுதி பொதுமக்கள் அவரைத் துரத்திச் சென்று பிடித்தனர். பிடிபட்ட நபரை கருவேலங்காட்டில் மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த கீழ்வேளூர் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி (26) என்பதும், தவெக கட்சியின் உள்ளூர் கிளைப் பொறுப்பாளர் என்பதும் தெரியவந்தது.