வீடு புகுந்து பெண்ணை தாக்கிய தவெக நிர்வாகிகள்
May 20, 2026, 20:50 IST
திருவள்ளூரில் தவெக நிர்வாகிகள் வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த பாரிவாக்கம் ஊராட்சி பானவேடுதோட்டம் பிடாரிதாங்கல் பகுதியை சார்ந்தவர் சசிகலா. இவர் கடந்த மே 2-ஆம் தேதியன்று இவர்கள் வீட்டின் அருகே சவ ஊர்வலத்தின் போது போதையில் இருந்த தவெக கட்சியை சேர்ந்தவர்கள், பட்டாசை கொளுத்திசசிகலா வீட்டிற்குள் போட்டுள்ளனர். பதற்றத்துடன் வெளியே வந்த சசிகலாவின் மகன் அற்புதராஜை கண்டதும் சரமாரியாக தாக்கியும், வீட்டிற்குள் நுழைந்து உள்ளே இருந்த சசிகலாவையும் ஆபாச வார்த்தைகளை கூறி கடுமையாகவும் தாக்கியுள்ளனர். காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டியுள்ளார்.