பனையூர் தவெக அலுவலகத்தில் பறந்த தவெக கொடி- வேட்பாளர்களை கண்காணிக்கும் விஜய்
தவெக தலைவர் விஜய் வாகனத்தைப் பின் தொடரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM-இல் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த காலங்களில் நண்பகலியே யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை கணித்துவிட முடியும். ஆனால், விஜய் கட்சி வாங்கும் வாக்குகளால் முடிவுகளை ஓரளவு கணிக்க மாலை வரை ஆகலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில் பனையூர் தவெக அலுவலகத்தில் பறந்த தவெக கொடி அதிகாலை முதலே பறந்துகொண்டிருக்கிறது. மேலும் தவெக தலைவர் விஜய் வாகனத்தைப் பின் தொடரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விபத்துகளைத் தவிர்க்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நீலாங்கரை பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களது வேட்பாளர்களை அவர்களுக்கு தெரியாமலேயே கண்காணிக்க தவெக தலைமை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்வெற்றி பெறுபவர்கள் கட்சி தாவுவதை தடுப்பதற்காக ஒரு வேட்பாளருக்கு 2 பேரை நியமித்து உன்னிப்பாக கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.