×

சி.வி.சண்முகம் வீட்டிற்கு தவெக நிர்வாகிகள் வருகை

 

அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்தை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தவெக அரசுக்கு ஆதரவளித்த 144 பேரில், அதிமுகவின் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட 29 பேரை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கட்சிக்கும் கடும் எதிர்ப்பு நிலவிவரும் சூழலில், சி.விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் இல்லத்திற்கு தமிழக வெற்றிக் கழக கொடியுடன் காரி வந்த நபர்கள், அவருடன் நீண்ட நேரமாக ஆலோசனை நடத்தினர். அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகிவரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.