“மத்தவங்களுக்கு ரூ.15 லட்சம், உங்களுக்கு ரூ.12 லட்சம்”- பெண் வழக்கறிஞரிடம் லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி
அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகிகள் பணம் வசூலிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
நீதிமன்றங்களில் அரசு சார்பாக வாதாடும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் நியமனம் என்பது மிக உயர்ந்த பொது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும். தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றுவருவதாக திமுக குற்றஞ்சாட்டிவருவதுடன் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாரும் அளித்துள்ளது. தகுதி, நேர்மை மற்றும் தொழில்முறைத் திறனுக்குப் பதிலாக, இந்த பதவிகள் விலைக்கு வாங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.
Hollo... @CTR_Nirmalkumar
— EPS 24×7 (@edapadiyaar_) July 27, 2026
உங்களுக்கு எவ்வளவு யார் மூலம் வாங்குறிங்க தவெக மாவட்ட செயலாளர் மருது மூலமா இல்லை king fisher கார்த்தி மூலமா...
15 லட்சம் வாங்குனோம் உங்களுக்கு னா 12லட்சம் கொடுங்க தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் வழக்கறிஞரிடம் பேம்பேசும் ஆடியோ…@CMOTamilnadu… pic.twitter.com/m62mesERBV
இந்நிலையில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகிகள் பணம் வசூலிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் அனீஷ், பெண் வழக்கறிஞரிடம் ரூ.15 லட்சம் பேரம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. ரூ.15 லட்சம் என்னால் அளிக்க முடியாது என பெண் வழக்கறிஞர் கூறும் நிலையில், ரூ.12 லட்சம் கொடுத்தால் அரசு வழக்கறிஞராக நியமிக்கலாம் என அனீஷ் கூறுகிறார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.