×

திருப்பூரில் 140 கிலோ குட்கா கடத்திய தவெக நிர்வாகி கைது

 

திருப்பூரில் 140 கிலோ குட்கா கடத்திய தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 


திருப்பூர் பல்லடம் அருகே காவல்துறையினர் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான காரில் சோதனை செய்தபோது உள்ளே இருந்த 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. த.வெ.க. நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாய்க்கால் மேடு தில்லைநகர் நெல்லை ஸ்டோர் உரிமையாளர் தமிழக வெற்றி கழக நிர்வாகி 10 லட்சம் மதிப்பீட்டில் போதை பொருட்கள் குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த போது காவல்துறையினர் தகவல் தெரிந்து அவர்களை விரட்டிப் பிடிக்கும் போது மெயின் அக்யூஸ்ட் டிரான்ஸ்போரத்தில் காரை மோதி விட்டு தப்பி ஓடிவிட்டார்.  இரண்டாவது குற்றவாளியான தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நெல்லை ஸ்டோர் உரிமையாளர் இல்லத்தில் 150 கிலோ பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியது. ஆளுங்கட்சி நிர்வாகிய இச்ச சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.