தவெக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கைது
தவெக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை காவல்துறை கைது செய்துள்ளது.
கரூரில் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தீவிரமாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவானது அமைக்கப்பட்டு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் சம்பவத்தை தீவிரமாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவானது அமைக்கப்பட்டு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தவெக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். நிர்மல்குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக எழுந்த புகாரின்பேரில் நிர்மல் குமாரை சாணார்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.