சேலத்தில் பறிப்போன உயிர்! வேலூர் பொதுக்கூட்டத்தில் பந்தல் அமைக்க தவெக முடிவு
வேலூர் அருகே அகரம் சேரியில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு, பிரம்ம முகூர்த்தத்தில் பந்தல்கால் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அகரம்சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் வரும் 23-ம் தேதி அன்று விஜய் நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டம் நடத்துவதற்காக 33-ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, சமன் செய்யும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில், இன்று அதிகாலை 4.30 மணி 6 மணிக்குள்ளாக பிரம்ம முகூர்த்தத்தில் யாகாம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து பந்தல் கால் நடப்பட்டது. த.வெ.க மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வேலூர் அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய தொகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் பந்தல் கால் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
23-ஆம் தேதி அன்று நடைபெறும் விஜய் சந்திப்பு கூட்டம் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி வெற்றிகரமாக நடைபெற சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டது.இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முதல் முறையாக பந்தல் அமைத்து 5000 போர் அமரும் வகையில் நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் திறந்தவெளி மைதானத்தில் பந்தல் அமைக்காமல் அமர்வதற்கு நாற்காலிகள் போடாமலேயே கூட்டங்கள் நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு முதல் முறையாக தொண்டர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட இருக்கிறது. தொண்டர்கள் வெயிலில் நிற்காமல் இருப்பதற்கு பந்தல் அமைக்கப்பட உள்ளது.5000 நாற்காலிக்கும், கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஸ்னாக்ஸ் தண்ணீர் பாட்டில் சிற்றுண்டி வைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமே சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது விஜயை காண வந்த தொண்டர்கள் வெய்யிலை சமாளிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் அதனால் ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்தது.
அதனை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி என்பது மார்ச் 23ஆம் தேதி திங்கட்கிழமை காலை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்துள்ளனர் . அந்த நேரம் வெயில் நேரம் என்பதால் பந்தல் அமைத்தும் நாற்காலிகளும் போடப்பட இருக்கிறது. பொதுவாக வேலூர் என்றாலே வெயில் ஊர் என்று சொல்வார்கள் தற்போது வேலூரில் வெயில் என்பது அதிகரிக்கக்கூடிய நிலையில் பந்தல் போடப்பட இருக்கிறது. அதேபோன்று 5000 பேருக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட இருக்கிறது.