☰
×

“திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி”- விஜய்

 

தமிழ்நாட்டில் உள்ள பாஜகதான் திமுக. திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் பலர் என எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என முதல்வர் விஜய் விமர்சித்தார்.


மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “திமுகவுடன் இணைந்து ஆட்சியமைப்பதை அதிமுகவினர் ஏற்பார்களா? கடன் வாங்குகிறேன். மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன். கொள்ளையடிப்பதற்காக அல்ல... நாட்டில் ஒரே ஆபாச நதியாக ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறாா்கள். திமுகவில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆபாசமாக பேசுவதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறாா்கள். ஜெயலலிதாவை தவறாக பேசியவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க நினைத்தபோது மற்றும் பலரின் முகமூடி கிழிந்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள பாஜகதான் திமுக. திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் பலர் என எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். உங்கள் கணக்கு எல்லாம் ஒன்றுக்கும் ஆகாத மனக்கணக்கு, எனக்கும் மக்களுக்கும் உள்ளது அன்புக்கணக்கு. நல்ல சாவே வரக்கூடாது என மக்களைதிமுகவினர் திட்டுகின்றனர்.திமுகவுக்கு வுக்கு ஓட்டுப்போடாததால் மக்களுக்கு நல்ல சாவே வராதா? ஆட்சியின் உரிமையாளர்கள் மக்கள்தான். சட்டசபையில்திமுக ஊழல் குறித்து பேசனால், அப்ப விஜய் பிறக்கவே இல்லை என சொல்கிறார்கள். நான் எப்போ பிறந்தால் என்ன? ஊழல் என்று சொன்னால் ஆதாரம் கேட்கிறார்கள். ஆதாரம் கொடுத்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என சொல்கிறார்கள். ஆட்சி கலையும் எனக் கூறும் உங்கள் கனவுதான் கலையும்.

இதற்கு முன்னர் மக்களின் பணத்தைத் தொட்டதே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? இனிமேல் தொட மாட்டோம் என்று சொல்ல முடியுமா? இதுவரை ஊழல் செய்ததில்லை என்று சொல்ல முடியுமா? அரசியலுக்கு வருவதற்கு முன்னர் உங்களுடைய சொத்துக் கணக்கு என்ன? வந்த பிறகு உங்களுடைய சொத்துக் கணக்கு என்னவென்று காட்ட முடியுமா? ‘நீ என்னப்பா எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் சாரையே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறாய்?' என்று சொல்கிறார்கள். அவர் தோத்தாலும், ஜெயித்தாலும் என் ஸ்வீட் அங்கிள். தவெக பலமடைய விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இந்த விஜய்யை தொடாதீர்கள், அப்புறம் ஏன் தொட்டோம் என்று காலத்துக்கும் புலம்புவீர்கள்” என்றார்.