புதுச்சேரியில் 3 தொகுதிகளை கைப்பற்றியது தவெக
புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு 16 இடங்களில் வெல்வது அவசியம். புதுவையை பொறுத்தவரை தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமி கடந்த முறையை போலவே இரண்டு தொகுதிகளில் களம் இறங்கினார். ரங்கசாமி தட்டாஞ்சாவடி மட்டுமின்றி மங்கலம் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளில் ரங்கசாமி வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களம்கண்ட தமிழக வெற்றிக் கழகம் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் (கட்சி வாரியாக முழு பட்டியல்)
என்.ஆர்.காங்கிரஸ் – 12
1. தட்டாஞ்சாவடி – ரங்கசாமி
2. வில்லியனூர் – ரவிகுமார்
3. லாஸ்பேட்டை – சிவக்கொழுந்து
4. முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன்
5. அரியாங்குப்பம் – அய்யப்பன்
6. ஏம்பலம் – மோகன்தாஸ்
7. நெட்டப்பாக்கம் – ராஜவேல்
8. காரைக்கால் வடக்கு – திருமுருகன்
9. ஏனாம் – மல்லாடி கிருஷ்ணாராவ்
10. உழவர்கரை – டாக்டர் நாராயணசாமி
11. மங்கலம் – ரங்கசாமி
12. இந்திரா நகர் – ஏகேடி ஆறுமுகம்
தமிழக வெற்றிக் கழகம் – 3
1. திருபுவனை – சாய் சரவணன் குமார்
2. மணவெளி – ராமு
3. உருளையன்பேட்டை – நேரு
திமுக – 5
1. நெல்லித்தோப்பு – கார்த்திகேயன்
2. காலாப்பட்டு – செந்தில்
3. ராஜ்பவன் – விக்னேஷ்
4. பாகூர் – செந்தில்குமார்
5. காரைக்கால் தெற்கு – நாஜிம்
பாஜக – 4
1. மண்ணாடிப்பட்டு – நமச்சிவாயம்
2. நிரவி – மீனாட்சி சுந்தரம்
3. முதலியார்பேட்டை – ஜான்குமார்
4. திருநள்ளாறு – ராஜசேகரன்
காங்கிரஸ் – 1
1. ஊசுடு – கார்த்திகேயன்
அதிமுக – 1
1. உப்பளம் – அன்பழகன்
லட்சிய ஜனநாயக கட்சி – 1
1. காமராஜர் நகர் – சார்லஸ் மார்டின்
சுயேட்சை – 3
1. கதிர்காமம் – அழகு
2. நெடுங்காடு – விக்னேஸ்வரன்
3. மாகே – அசோக் குமார்
மொத்தம்: 30/30 தொகுதிகளின் முடிவுகள் வெளியானது.