×

ஆர்.கே.நகர் பாணியை பின்தொடரும் TVK வேட்பாளர்..! விஜய்யின் உருவ பொம்மையுடன்... 

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையைப் பயன்படுத்தி தொண்டர்கள் வாக்குச் சேகரிக்கப்பட்டது.

இப்போது, விஜய்யின் உருவ பொம்மையைத் தொண்டர்கள் பயன்படுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

தவெக சார்பில் நவல்பட்டு விஜி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், விஜய்யின் உருவப் பொம்மையுடன் சிறப்பு வாகனத்தில் ஏறி, 500க்கும் மேற்பட்ட கட்சியினருடன் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்துக்கு சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்ததும், விஜய்யின் உருவப் பொம்மையுடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதை விமர்சித்து வருகின்றனர்.