`மை’ சிறிது நேரத்திலேயே அழிவதாக தவெக வேட்பாளர் குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி 92-இல் வாக்காளர்கள் கைகளில் வைக்கப்படக் கூடிய `மை’ சிறிது நேரத்தில் அழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்தியூர் தொகுதிக்குட்பட்ட கிராம பகுதி வாக்குச்சாவடிகளில் நண்பகலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இதில் அதிகபட்சமாக பெண்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அந்தியூர் தொகுதிக்குட்பட்ட எரங்காட்டூர் வாக்குச்சாவடியில் நிமுக வேட்பாளர் சிவபாலன் தனது வாக்கை பதிவு செய்தார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான முறையில் வாக்குபதிவு நடந்து வருவதாகவும், இது திமுகவிற்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி 92-இல் வாக்காளர்கள் கைகளில் வைக்கப்படக் கூடிய `மை’ சிறிது நேரத்தில் அழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக வேட்பாளர் விஜய் வெங்கடேஷ் வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.