×

“தவெகவை சேர்ந்த 2 சின்ன பசங்கள பார்த்து போலீசே பயப்படுத்து”- புஸ்ஸி ஆனந்த்

 

தவெகவை சேர்ந்த இரண்டு சின்ன பசங்க போனாலும் போலீசே பயப்படுத்து என த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார். 

சென்னை தாம்பரத்தில் தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கம் மற்றும் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் கில்லி சரத் தலைமையில் நடைபெற்றது. இதில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், லயோளா மணி உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பேசினார்கள்.


மேடையில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “தவெக கட்சி நிர்வாகிகள் சின்ன பசங்க 2 பேரா இருந்தாலும் போலீஸ் அவங்கள பார்த்து பயப்படுத்து,  நாம பேசறது கேட்குதோ இல்லையோ. விசில் சின்னம் கிடைத்தற்கு பிறகு  விசில் சத்தம் அதிமாகிவிட்டது. 
விசில் தயாரிப்பாளர்கள் கொடுத்துவைத்தவர்கள். தலைவர் விசில் ஊதினால் உலகம் முழுவதும் கேட்கும். தமிழகத்தில் மே மாதத்தில் முதல்வராக பதவியேற்பார். அப்போது விசில் சத்தம் தமிழ்நாடு முழுவதும் கேட்கும்” என்றார்.