×

“அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இருக்கவேண்டிய இடத்தில் இருந்திருப்பார்”- அருண்ராஜ்

 

திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாத பிரச்னை, தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை உடன்தான் இருக்கிறார்கள். இதில் ஆதாயம் தேட பாஜகவும், திமுகவும் முயல்கின்றன என தவெக மாநில பொதுச்செயலாளர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக மாநில பொதுச்செயலாளர் அருண்ராஜ், “அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சகோதர மனப்பான்மை உடன், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இதுதான் நிலைமை. மதுரை கள்ளழகர் திருவிழாவில் அழகர் ஊர்வலம் வரும்போது இஸ்லாமிய சகோதரர்கள் அதனை வழிபட செய்கின்றனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள வாவர் மசூதிக்கு செல்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாத பிரச்சனை. தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை உடன் தான் இருக்கிறார்கள். இதில் ஆதாயம் தேட பாஜகவும், திமுகவும் முயல்கின்றன.

எங்கள் தலைவர் விஜய் சொன்ன டயலாக் யாருக்கு பொந்துமோ, இல்லையோ அண்ணாமலைக்கு பொருந்தும். அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தா அவர் இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். எங்கள் கட்சி தலைவர் எப்ப, எது பேசணும்னு அவர் சொல்ல தேவையில்லை, தலைவருக்கு தெரியும். விஜயின் மக்கள் சந்திப்புக்கு போதிய காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும்.” என்றார்.