×

அடுத்த வாரம் தமிழக வெற்றி கழகத்தின் செயலி அறிமுகம்? 

 

நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். வருகிற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை எனவும் அறிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். மே மாதத்திற்குள் அதிக அளவு உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செயலிக்கான பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பாஸ்வேர்டை பயன்படுத்தி தங்கள் மாவட்டங்களுக்கான உறுப்பினர் சேர்க்கையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.