16 நாட்களுக்கு பின் வெளியில் வந்த என்.ஆனந்த்! விஜய்யுடன் ஆலோசனை
சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக தலைவர் விஜய் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்திவருகிறார்.
கரூரில் கடந்த 27ம் தேதி அன்று தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர்
என்.ஆனந்த் அந்தநாள் முதல் தற்போது வரை தலைமறைவாக இருந்து வந்தார். குறிப்பாக காவல்துறை கைது நடவடிக்கை எடுத்து விடுமோ என்பதற்காக சேலம் ஏற்காடு, தேனி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் அவர் தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். தனி நபர் ஆணையம், SIT விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இன்று அந்த வழக்கை சிபிஐ விசாரணை கையில் எடுத்துள்ள நிலையில், நேற்று இரவில் தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் விஜய்யை சந்தித்த பொதுச் செயலாளர் என்.ஆனந்த் சுமார் 20 நிமிடம் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக தலைவர் விஜய் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்திவருகிறார். சி.டி.ஆர்.நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றார். கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.