×

#BREAKING தவெகவில் பதவிக்காக போராடிய அஜிதா தற்கொலை முயற்சி

 

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக நிர்வாகியான அஜிதா ஆக்னல் மாவட்ட செயலாளர் பதவி கேட்டு விஜயின் காரை முற்றுகையிட்டு சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அஜிதா ஆக்னல் இன்று வீட்டில் தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அஜிதாஆக்னல் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி இவர் தமிழக வெற்றி கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தினால் நேற்று முன்தினம் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் காரை முற்றுகையிட்டு அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த அஜிதா ஆக்னல் மூன்று நாட்கள் உணவு அருந்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் திமுக கைக்கூலி என அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய சம்பவத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன் காரணமாக மயங்கி கீழே சரிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த அவரது கணவர் உள்ளிட்டோர் அவரை உடனடியாக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அஜிதா ஆக்குனல் தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அஜிதா தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Visual send FTP