“எத்தனை கேஸ் வேண்டுமானாலும் போடுங்க”- வழக்கறிஞர் அணியை கூட்டிய தவெக
Nov 1, 2025, 15:25 IST
தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் தவெகவின் மண்டல மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணியின் ஒருங்கிணைப்பாளர்கள் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர். மேலும் வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், CTR.நிர்மல்குமார், வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கட்சியினர் மீது பதியப்படும் வழக்குகள், சிக்கல்கள் உள்ளிட்டவற்றை திறம்பட கையாளுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.