×

“நான் தான் வேட்பாளர்... எனக்கு தான் ஓட்டு போடனும்”- வேட்பாளர் பட்டியல் வரும் முன்பே நாமக்கல்லில் பிரச்சாரத்தை தொடங்கிய தவெக நிர்வாகி

 

வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தான் தான் நாமக்கல் தொகுதி வேட்பாளர் என களத்தில் குதித்து தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வரும் த.வெ.க நிர்வாகியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் திலீப் என்பவர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தான் தான் என் கூறிக்கொண்டு நாமக்கல் சட்டமன்றத் தொகுதி க்கு உட்பட்ட மோகனூர் பகுதியில் இன்று தனது ஆதரவாளர்களுடன் வீடுவீடாக சென்று விசில் சின்னம் மற்றும் தனது புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரம் வழங்கி விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். இவர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியின் அஇஅதிமுக முன்னாள் எம்எல்ஏ திரு.கே.பி.பி.பாஸ்கரின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

null

null


த.வெ.க சார்பில் போட்டியிட மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் மற்றும் திலீப் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.  திலீப் ஏற்கெனவே நாமக்கல் தொகுதி அஇஅதிமுக ஐ.டி விங் ல் பதவி வகித்து வந்தார். அதில் இருந்து விலகி த.வெ.க வில் இணைந்தார். ஆம்னி பேருந்து லாரி தொழில் செய்து வருகிறார். தலைமை அறிவிக்காமலேயே இவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.