×

“தைரியமிருந்தால் விஜய்யை கைது செய்யுங்கள்”- ஆதவ் அர்ஜூனா

 

தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம் என தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.


தவெக பொதுக்குழுவில் உரையாற்றிய தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “சட்டமன்ற தேர்தலில் கருப்பு, சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே விஜய், உங்களுக்கு நன்றி இல்லையா? தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம். முதலில் அவர் வீட்டிற்குள் செல்லுங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். இளைஞர் புரட்சி 2026 ஆம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது. Road Show-னா மக்கள் இருக்கணும், வெறும் Road-ல போறது Road Show கிடையாது. 


மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக் கழகம் கிடையாது. கரூர் மக்கள் உயிரிழந்த அந்த 30 நாட்களும் கண்ணீர் சிந்தியது மட்டும் அல்லாமல் அவர்களை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை. அவை நாவடக்கம் தெரியாமல் சட்டப்பேரவையில் அமர்ந்து கொண்டு கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருக்கிறார்கள். தைரியமிருந்தால் எங்கள் தலைவர் விஜய்யை கைது செய்யுங்கள். ஆயுத எழுத்து படம் பார்த்திருக்கிறீர்களா. அந்த புரட்சி தமிழகத்தில் 2026ல் உருவாகும்” என்றார்.