×

“திமுக நம்மை பார்த்து பயப்படுகிறது! அதிமுகவை அட்டாக் செய்யாதீர்கள்”- நிர்வாகிகள் மத்தியில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

 

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தவெகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, "திமுக நம்மை பார்த்து மட்டும்தான் பயப்படுகிறது. இந்நேரம் 38 மாவட்டங்களுள் 32 மாவட்டங்களில் தலைவரின் சுற்றுப்பயணம் முடிந்திருக்க வேண்டும். ஆனால், தலைவர் எந்த மாவட்டத்திற்கும் போக முடியாத சூழ்ச்சியை திமுக கரூரில் உருவாக்கியது. கரூர் சம்பவம் முழுக்க முழுக்க திமுகவின் சூழ்ச்சி. அதவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். திமுக வுடன் தவெக தொண்டர்கள் சண்டை போட வேண்டாம். அதிமுக எந்த கூட்டணி உருவாக்கினால் நமக்கு என்ன? தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும் ஃபோகஸ் செய்யுங்கள், அதிமுகவை அட்டாக் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்