“மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று”- ஆதவ் அர்ஜூனா
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா 15,748 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை வீழ்த்தி அவர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “50 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளது, இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் களமிறங்கி வேலை பார்த்த வில்லிவாக்கம் தொகுதியில் திமுக தோல்வியடைந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்பார் என்று அன்றே சொன்னேன். கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த திமுகவினருக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர். த.வெ.க. என்ற கட்சிக்கு எதிராக ஒரு அரசாங்கமே நின்றது. இந்த மாற்றத்தை உருவாக்க போகிறார்கள் என 6 மாதமாக சொல்லிட்டு இருந்தேன். இன்றைய வரலாறு இந்தியாவே எதிர்பார்க்காத ஒன்று” என்றார்.