×

“நான்கு நாட்களில் தமிழ்நாட்டின் நிலவரம் மாறிவிட்டது”- ஆதவ் அர்ஜூனா

 

நான்கு நாட்களில் தமிழ்நாட்டின் நிலவரம் மாறிவிட்டது. இன்னும் 2 நாட்களில் அது தெரியும் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.


சென்னை லயோலா கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை தமிழக வெற்றி கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர்  ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “திமுக நம்பியது வாக்கிற்கு 5000 ரூபாய் பணத்தைத்தான்... தவெக வீடு வீடாகச் சென்று பெரிய புரட்சியை உருவாக்கியது. நான்கு நாளில் தமிழ்நாட்டின் நிலவரம் மாறிவிட்டது. இன்னும் 2 நாட்களில் அது தெரியும். வாக்கு எண்ணிக்கை நாளன்று தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ளவிருப்பதாக வதந்திகள் பரவுகிறது. அவர் ஆஸ்திரேலியா போகவில்லை, Moonக்கு போகிறார். அவருக்கு திமுகதான் ராக்கெட் ்தயார் செய்து கொடுத்திருக்கிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டிய நபர்கள் பற்றிய விபரத்தை விஜய் தயார் செய்ய சொல்லியிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை அன்று செய்ய வேண்டிய பணிகளை விஜய் தொடங்கி 234 தொகுதி வேட்பாளர்கள் வரை அனைவரும் தயார் செய்து வருகிறார்கள். தேர்தல் நாளில் எங்கள் தவெக வேட்பாளர் சினோரா அசோக் சேகர்பாபு மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயமாகும். ” எனக் கூறினார்