“எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என்ற பதவி வெறியில் மு.க.ஸ்டாலின் சுற்றிக் கொண்டிருக்கிறார்”- ஆதவ் அர்ஜூனா
எப்படியாவது இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பதவி வெறியில் மு.க.ஸ்டாலின் சுற்றிக் கொண்டிருக்கிறார் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “மக்கள் தொகையின் அடிப்படையில் MPக்கள் உருவாக்குவதால் வட மாநிலத்தையும் தென் மாநிலத்தையும் பிரிக்கிறார்கள். இந்தியாவே ரெண்டாக துண்டாக்கபடுகிறது. 40 எம்பி வைத்திருப்பவர்கள் இதை முடக்கி இருக்க வேண்டும். பேருக்கு தேர்தல் நேரத்தில் நாங்கள் எதிர்க்கிறோம், கருப்பு கொடி காட்டுகிறோம் என்று தேர்தல் நேரத்தில் நாங்கள் பிஜேபியை எதிர்க்கிறோம் என்று பொய்யாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுதான் காலம் காலமா நீட்டை ஒழிக்கிறேன்னு சொன்னாங்க. ஒழிச்சிட்டாங்களா? பிஜேபிக்கு எதிராக ஏதாவது போராட்டம் பண்ணாங்களா?எதிர்கட்சியா இருக்கும்போது மு.க. ஸ்டாலின் என்ன சொன்னாரு? சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுட்டு, ஒரு அடிமையா இருக்கிறார் இபிஎஸ்ன்னு சொன்னாரு. இப்ப அதைத்தான் பண்ணிட்டு இருக்காரு. இபிஎஸ் பழனிசாமி ஐயா அவர்களுக்கும், மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இதுல என்ன வேற்றுமை நீ கண்டீங்க?
அம்மா பிரேமலதா வாயாலேயே சொல்லிட்டாங்க பெண் பாதுகாப்பு இல்லை, DRUGS SALES அதிகமா இருக்கு. எனக்கு தெரிஞ்சு, திமுகவுல இருக்கக்கூடிய துரந்தர் அவங்கன்னு நினைக்கிறேன். திமுக கூப்பன் பிரச்சனையால் தர்கொலை செய்துகொண்ட சிந்துஜா விவகாரம் குறித்து டெல்லியில் அட்வகேட் ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறோம். டெல்லியில் இருக்கும் தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து நாங்கள் மனு கொடுக்கப் போகிறோம். ஊழகில் ஊறித்திளைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சுரண்டி, ஆயிரக்கணக்கான கோடிகளில் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ள தீயசக்தி திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பதவி வெறியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்றார்.