×

“அதிமுக, திமுக இடையே கை மாறிய பெட்டிகள்”- ஆதவ் அர்ஜூனா

 

மதுராந்தகம் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

மதுராந்தகத்தில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “இரண்டாம் இடத்தை யார் பிடிப்பது என்பதில் தான் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் போட்டி, அதிலும் இரண்டு பேருக்கும் அன்டர் ஸ்டாண்டிங் இருக்கு. மதுராந்தகத்துல திமுக ஜெயிக்கணும்னு  அதிமுக பெட்டி வாங்கிருச்சு. தாராபுரத்துல அதிமுக ஜெயிக்கணும்னு திமுக பெட்டி வாங்கிருச்சு. மதுராந்தகம் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற வேண்டும். 5 ஆண்டுகளாக பெட்டி வாங்கிய தி.மு.க இன்று பெட்டியோட சுத்திட்டு இருக்கு. எதிர்கட்சியாக அ.தி.மு.க இருக்கும் போது சிங்கம் மாதிரி இருப்பாங்க அம்மா.. தி.மு.கவினர் எப்படி பயப்படுவாங்க அப்போலாம்.. ஜெயலலிதாவுக்கு பிறகு தி.மு.க அஞ்சி நடுங்கியது விஜயை பார்த்து தான்.. இப்போ 2ஆம் இடம் யாருக்கு என்பதில் தான் தி.மு.க, அ.தி.மு.க இடையே போட்டி.எழும்பூர்ன்னு சொன்னாலே தி.மு.க தான்னு சொல்லுவாங்க.. அண்ணன் ரெண்டு ரவுண்டு தான் வந்தாரு மொத்தமா காலி.. மதுராந்தகம் தி.மு.க வேட்பாளர எழும்பூர்லயே ராஜ்மோகன் அடிச்சு துவைச்சு விட்டாரு.. உள்ளூர்லயே ஒண்ணும் செய்ய முடியலையாம்” என்றார்.