×

ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் உயிரிழப்பு - 7 பேர் காயம்!!

 

பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் உயிரிழந்த தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து பள்ளி சிறுவன்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.  செய்துங்கநல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்துள்ளார்.  தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ அனவரதநல்லூர் பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

 இதில் 5 வயது சிறுவன் செல்வ நவீன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.  அத்துடன் 7 பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.