வீரமணி வழக்கில் திருப்பம்- சாந்தி பரபரப்பு புகார்
ஜெம் கிரானைட் வீரமணி மற்றும் அவரது மகனால் தனது உயிருக்கு ஆபத்து என வீரமணியின் உதவியாளர் சாந்தி புகார் அளித்துள்ளார்.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு பூதாகரமாகியுள்ளது. அடுத்தடுத்து அந்த வழக்கில் அதிர்ச்சிகரமான அப்டேடுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உட்பட 3 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெம் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான பிரகாஷ் என்பவருக்கும் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் வழங்க பிரகாஷை போலீஸ் தேடி சென்ற நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் தனது பெயர் சிறுமிகள் பாலியல் வழக்கில் (எஃப்ஐஆர்) சிக்காமல் இருக்க வீரமணி, காவல் துறை உயரதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சியினருக்கும் ரூ. 70 கோடி மதிப்பிலான பணத்தை செட்டில் செய்ததாக சொல்லப்படுகிறது. சென்னை ஈசிஆர், ஊட்டியில் உள்ள வீரமணிக்குச் சொந்தமான ரூ. 130 கோடி மதிப்பிலான நிலங்களை ரூ 70 கோடிக்கு விற்பனை செய்து அந்த பணத்தை பலருக்கும் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜெம் கிரானைட் வீரமணி மற்றும் அவரது மகனால் தனது உயிருக்கு ஆபத்து என வீரமணியின் உதவியாளர் சாந்தி புகார் அளித்துள்ளார். தனது 13 வயது முதலே வீரமணி பாலியல் ரீதியாக சீரழித்து வந்ததாக சாந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன்னர் சாந்தி பதிவு செய்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது